கொரோனாவால் உலகெங்கிலும் 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உயிரிழப்பு!

கொரோனா தொற்று பரவத்தொடங்கியது முதல் இதுவரை உலகெங்கிலும் 600-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

உலகளவில் இதுவரை 2,30,000-க்கும் மேற்பட்ட சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் 600-க்கும் மேலான செவிலியர்கள் உயிரிழந்திருப்பதும் ICN (The international council of nurses) -ன் பகுப்பாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. போதிய பாதுகாப்பு உபகரணகங்கள் வழங்காததும், பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை மீண்டும் உபயோகிக்க வலியுறுத்தப்படுவதும்தான் பாதிப்புகளுக்குக் காரணம் எனப் பல நாடுகளிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *