மூன்று மாத வாடகையே வேண்டாம் பத்து ரூபாய் டாக்டரின் செயலால் நெகிழ்ந்த வியாபாரிகள்!

91 வயதிலும் உடலில் எந்தக் குறைகளும் இல்லாமல் தன் வேலைகளை தானே செய்ய கூடிய வகையில் ஆரோக்கியமாக இருக்கிறார்.

பட்டுக்கோட்டையில் டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கொரோனா லாக்டெளனால் கடைகள் திறக்காமல் போனதில் வருமானம் இல்லாமல் தவித்ததைக் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார்.இந்த நிலையில், பெரிய தெருவில் உள்ள தனது கிளினிக் அமைந்துள்ள இடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார் ரத்தினம். இதில் துணிக்கடை, காலணிகள் உள்ளிட்ட கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் வருமானம் இழந்து தவித்துள்ளனர்.இந்த நிலையில், கடைகளின் உரிமையாளர்கள், டாக்டரிடம் ஒரு மாத வாடகை பணத்தை குறைத்துக் கொண்டு இரண்டு மாத வாடகை பணத்தை மட்டும் தருகிறோம் எனக் கேட்பது குறித்துப் தங்களுக்குள் பேசியுள்ளனர். இதை அறிந்த ரத்தினம் அவர்களை தொடர்புகொண்டு, `கடந்த மூணு மாசமா வருமானம் இல்லாமல் துயரத்தைச் சந்தித்து வருகிறீர்கள்.. எனக்கு நீங்க அனைவரும் கொடுக்க வேண்டிய மூன்று மாத வாடகை பணத்தை தர வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதன் மொத்த தொகை 4 லட்சத்து 20,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *