சவுதியில் பணிக்காக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்!

சவுதி அரேபியாவி்ல் பணிக்காக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், நாடு கடத்தப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு எச்சரித்துள்ளது

வளைகுடா நாடுகளும் கொரோனா வைரசின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் சவுதி அரேபியாவில் 93,157 கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபிய அரசு சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதித்துள்ளது.

இருப்பினும், சவுதி அரசாங்கம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறிதுகூட தளர்வு காட்டவில்லை.

இது தொடர்பில் சவுதி அரசு விடுத்துள்ள உத்தரவில்,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ள அதேசமயம் மக்களுக்கு தளர்வுகளும் அளி்க்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2வது முறை தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், மக்கள் விருந்துகள், விஷேசங்களை வீடுகளில் நடத்தலாம் என்றும் , ஆனால் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும் துக்க வீடுகள், இறுதிச்சடங்கு போன்றவற்றிலும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சவுதி அரேபியாவி்ல் உள்ள தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதுடன் ஊழியர்களுக்கு கிருமி நாசினிகள், சானிடைசர் வழங்கிட வேண்டும் எனவும் ஊழியர்கள் தங்குமிடம், கழிவறை போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஷொப்பி்ங் மோல்களில் நுழைவாயில், வெளியேறும் வாயிலில் கண்டிப்பாக சானிடைசர் வைக்கப்பட வேண்டும், என்பதுடன் கடைகளுக்குசெல்லும் மக்கள் சமூக விலகலைக் கடைபிடித்து நிற்க வேண்டும் என்பதோடு கடைகளில் இருக்கும் பொருட்கள் கொண்டு செல்லும் தள்ளுபடி, கூடைகள், தரைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, ஆடை மாற்றும் அறை போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் சவிதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *