எந்தவித அறிகுறியும் இல்லாமல் நுரையீரலை தாக்கும் கொரோனா

கொரோ னா வைரஸ் எந்த விதி அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ேடார் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாளுக்கு பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் பலரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. அதிக பாதிப்பு உள்ளர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். பலர் கொரோனா வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.   

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களில் சிலர் ஒரு நாள் மற்றும் ஒரு சில மணி நேரத்தில் மரணம் அடைந்துவிடுகின்றனர்.  இதற்கு  முக்கிய காரணம் அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குவதுதான். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களுக்கு முதலில் சிறிய அளவிலான அறிகுறி மட்டுமே தென்படும். அதன்படி காய்ச்சல், சளி, இருமல், உடம்பு வலி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இறுதியாகதான் மூச்சு திணறல் ஏற்படும். இதன்பிறகு அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்நிலையில் சில நாட்களாக இந்த வைரஸ் எவ்வித சிறிய அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுழையீரலை தாக்கி பாதிப்பு உண்டாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “எனக்கு காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லை. ஆனால் ஒரு நாள் திடீரென்று மூச்சு விடுதில் சிரமம் ஏற்பட்டது. உடன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது” என்றார். இது தொடர்பாக நுரையீரல் சிறப்பு மருத்துவர் எம்.ஹரிஸ் கூறியதாவது : கொரோனா வைரஸ் காற்றில் உள்ள சளி மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் மூச்சு குழாய் வழியாக தான் உடலின் உள்ளே செல்கிறது. இதன்படி இது முதலில் மூச்சு குழாய் மற்றும் அது சார்ந்த நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட பிறகு நுரையீரல் பகுதியில் சளி கட்டி கொள்கிறது. இதைத் தொடர்ந்து மூச்சு கலக்கும்் இடத்தில் சளி அடைத்து கொள்கிறது. அப்போது சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும். இதைத்தவிர்த்து மாரடைப்பு, ரத்தம் கட்டுதல், நுரையீரல் செயல் இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதனால் செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஏற்கனவே இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு செயற்கை சுவாசம் அளித்தாலும் பலன் இல்லாமல் இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்  வயது அதிகம் உடையவர்கள் மரணம் அடைகின்றனர். குறைந்த வயது உடையவர்கள் குணமடைந்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *