பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி திடீர் மரணம்!

பழம்பெரும் நடிகர் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. 2009-ம் ஆண்டு வெளியான வயபுத்ரா படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் கடந்த 10 ஆண்டுகளில் 19 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலானவை ரீமேக் படங்கள்.

நடிகை மேக்னா ராஜை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சிரஞ்சீவி சார்ஜா, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மூச்சுத்திணறல் பிரச்னை இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *