நானே பிரதி செயலாளர் நாயகம்!அனுஷா அதிரடி

மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிந்தேன். இதற்கு ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே பொருத்தமாக இருக்கும். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் பிரகாரம் நான் நீக்கப்படவில்லை. எனவே, நானே பிரதி செயலாளர் நாயகமாக இன்றளவிலும் இருக்கிறேன்.”

இவ்வாறு அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து அனுசா சந்திரசேகரனை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள மலையக மக்கள் முன்னணி, அவர் வகித்த பிரதி பொதுச்செயலாளர் நாயகம் பதவிக்கும் புதியவர் ஒருவரை நியமித்துள்ளது.

இது தொடர்பில் கேட்டபோதே அனுசா மேற்கண்டவாறு கூறினார்.

” நான் பதவியிலிருக்கும்போதே இன்னொருவரை நியமித்ததற்கு எதிராக வேண்டுமானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

புரட்சி தலைவன் அமரர் சந்திரசேகரனின் மகளாக சட்டம் படித்த ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான ஊடக அறிக்கைகள் ஒருபோதும் என்னை பின்னடைய செய்யவோ அல்லது என்னுடைய அரசியல் பயணத்தை தடுக்கவோ செய்யாது.

எனது தந்தை அமரர் சந்திரசேகரன் எவ்வாறு 1994ம் ஆண்டு தனித்து களமிறங்கினாரோ அதே போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நான் தனித்து களமிறங்குவதும் வெல்வதும் உறுதி.

இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று அமரர் சந்திரசேகரன் வழிவந்த மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்கும் மலையக மக்களுக்காகவும் எனது குரல் என்றென்றும் ஒலிக்கும்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *