புதிய தொழில்களில் ஆர்வம் செலுத்துவோம்!

சந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை விட்டுவிடுங்கள். பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார், எதிர்கடைக்காரன் என்ன செய்கிறான் என்று பார்த்து அதையே நீங்களும் செய்யாதிருங்கள்.

நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள், எனவே உங்களுக்கு ஏற்ற தொழில்களை (business) செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால், உங்களுக்கென்று தனி பாணியை உருவாக்குங்கள்.
தனித்தன்மை வாய்ந்த தொழிலை தொடங்குங்கள். நீங்கள் சார்ந்த துறையில், நீங்கள் விற்கும் பொருள் (product) மற்ற அனைத்தையும் விட சிறந்ததாக இருக்கட்டும்.

“(Business is all about solving problems) நீங்கள் தொடங்கும் தொழில் புதிய பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாகவோ அல்லது பழைய பிரச்சனைக்கு புதிய வகையில் தீர்வு கொடுப்பதாகவோ இருக்கட்டும்.”

பல்வேறு புதிய தொழில்கள் இருக்கின்றன நாம் தான் அதனை கண்டறிய வேண்டும்.

“தொழிநுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு, ஆற்றல் மற்றும் அனுபவம் இல்லாமல்தான் தற்போதைய பல பில்லியன் பெறுமதியான உலக முன்னணி நிறுவனமான அலி பாபா Alibaba.com  நிறுவனத்தை ஜக் மா (Jack Ma) உருவாக்கினார்.”
தேவைப்படுவதெல்லாம் உங்களுக்கு எதையாவது செய்யவேண்டும் எனும் வெறி, சந்தையில் உங்களுக்கு என்று ஒரு அடையாளம் உருவாக்கவேண்டும் என்பது தான்.

புதிய தொழில்நுட்பங்களை தேடுங்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள், அவற்றை விடா முயற்சியுடன் முயன்று பாருங்கள். நிச்சயமாக வெற்றி கிட்டும்.

ஞாபகம் இருக்கட்டும், ஐ போன் (i-phone) அறிமுகம் செய்யும் முன் ஆப்பிள் (apple) நிறுவனம் கணினி தயாரித்து விற்பனை செய்து வந்தது. அவர்கள் புதியதாக, போன் சந்தையில் பல புதிய தொழில்நுட்பங்களை களமிறக்கினார்கள், இன்று ஜொலிக்கிறார்கள் .
நீங்கள் எந்த சந்தையில் நுழைகிறீர்கள் என்பது முக்கியமில்லை, தெரிந்த தொழிலா தெரியாத தொழிலா என்பது முக்கியமில்லை, நீங்கள் நுழையும் சந்தையில் உங்கள் வியாபாரம் அல்லது பொருள் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும். அதன் அடிப்படையில்தன் நீங்கள் உங்களுக்கான வியாபாரத்தினையும் பொருளையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.

என்னுடைய வேண்டுகோள் புதிய வியாபாரத்தினை (new business), புதிய பொருளை (new product), புதிய சந்தையை (new market), புதிய தொழில்நுட்பத்தை (new technology) உருவாக்குங்கள் என்பதே.

“தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள #ஊக்கத்தின் அளவே இருக்கும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *