பாலியல் சுகத்திற்காக ஆண் உறுப்பு வழியாக மொபைல் சார்ஜரை உள்ளே விட்டு இளைஞர்!

அசாமில் தனது ஆண் உறுப்பு வழியாக மொபைல் சார்ஜரை உள்ளே விட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் பையிலிருந்து கேபிளை நீக்கியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் தனது பாலியல் சுகத்திற்காக தனது ஆண்குறி வழியே கேபிள்கள் மற்றும் பிற பொருட்களை சொருகும் பழக்கத்தை உடையவர். அதேபோல் மொபைல் போனின் சார்ஜ் ஒயரை உபயோகிக்கும் போது அந்த கேபிள் அவரது சிறுநீர்ப்பையை அடைந்ததன் காரணமாக வயிற்று வலியில் அவதிப்பட்ட அந்த இளைஞர் வேறு வழி இல்லாமல் மருத்துவமனையை நாடியுள்ளார்.

மேலும் மருத்துவர்களிடம் தான் வாய் வழியாக சார்ஜ் கேபிளை முழுங்கியதாகவும் பொய் கூறியுள்ளார். உடனே மருத்துவர்கள் அவரது மலத்தை ஆராய்ந்து எண்டோஸ்கோபியையும் நடத்தியுள்ளனர், ஆனால் கேபிளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரை அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது இரைப்பைக் குழாயிலும் எதுவும் இல்லை.

இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அப்போதே அவருக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்துள்ளனர் அதன் மூலம் கேபிள் உண்மையில் நபரின் சிறுநீர்ப்பையில் இருப்பது தெரியவந்தது. அப்போதே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெற்றிகரமாக கிட்டத்தட்ட இரண்டு அடி நீளமுள்ள கேபிளை அவரது சிறுநீர் பையிலிருந்து அகற்றினர். மேலும் தற்போது அந்த இளைஞர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் இஸ்லாம் கூறுகையில்,’பாலியல் இன்பம் பெற மனிதன் தனது ஆண்குறி வழியாக பொருட்களை செருகும் பழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ‘இந்தச் செயலை சிறுநீர்ப்பை சுய இன்பம் அல்லது சிறுநீர்ப்பை ஒலித்தல் என்று அழைக்கலாம். அவரது விஷயத்தில்,  சிறுநீர்ப்பையில் இணைக்கப்பட்ட  தண்டு சிக்கி கொண்டது  எனது 25 ஆண்டுகால மருத்துவ  வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வழக்கை நான் கண்டதில்லை’ என்று கூறினார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *