கணவனை விட்டு 62 வயது நபருடன் ஓட்டம் பிடித்த மனைவி!

தமிழகத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரிடமே 62 வயது மதிக்கத்தக்க நபருடன் தான் வாழ்வேன் என்று கூறியதால், ஆத்திரத்தில் கணவன் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்வேல்முருகன். 38 வயதான இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற 34 வயது மனைவியும், 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், இவர்களின் வீட்டிற்கு அருகில் கவலாளியாக வேலை பார்த்து வந்த 62 வயது மதிக்கத்தக்க கோவிந்தசாமி என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளைடைவில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இதை அறிந்த லட்சுமியின் மகள் ,உடனடியாக இது குறித்து அப்பாவான செந்தில் வேல்முருகனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து வேல்முருகன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இந்த ஜோடி அவரின் பேச்சை கேட்பது போன்று தெரியவில்லை.

இதற்கிடையில் ஊரடங்கு அமுலில் இருந்ததால், கூலித் தொழிலாளியான வேல்முருகன் வேலை இல்லாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

வருமானம் எங்கே என்று கேட்டு லட்சுமி துளைத்தெடுத்து கொண்டே இருந்தார். ஊரடங்கு நேரத்தில் இவர்களின் தகராறு வீட்டிற்குள் வெடித்து கொண்டே இருந்தது.

ஒருகட்டத்தில் லட்சுமி 20 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு கந்தசாமியுடன் வெளியேறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகன், கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். குடும்பம் நடத்த வா என்று பலமுறை கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கூப்பிட்டும் அவர் மறுத்துவிட்டார். “வாழ்ந்தால் கோவிந்தசாமியோடுதான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன் சமாதானம் செய்ய வந்த வேல்முருகனை கோவிந்தசாமியும், லட்சுமியும் சேர்ந்து அடித்து தாக்கி உள்ளனர்.

இந்த அவமானம் தாங்காமல் வீட்டிற்கு வந்த வேல்முருகன், 2 லிற்றர்ர் பெட்ரோலை வாங்கி கொண்டு விடிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

கதவை திறந்த அந்த காதல்ஜோடி மீது மளமளவென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத இருவரும் தீயில் துடித்தனர். அதற்குள் செந்தில்வேல்முருகன் அங்கிருந்து தப்பிவிடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் இதில் லட்சும் பரிதாபமாக உயிரிழந்தார். 60 சதவீதம் தீக்காயங்களுடன் கோவிந்தசாமி உயிருக்கு போராடி வருகிறார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *