விஜய் மல்லையா மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்

இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மோசடி வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சி.பி.ஐ. தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில் அவர் அடைக்கப்படும் சிறை மற்றும் சிறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், சிறையில் அவருக்காக பலத்த பாதுகாப்புடன் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்று சி.பி.ஐ. தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய வீடியோ பதிவு ஒன்றையும் லண்டன் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து விஜய் மல்லையாவை சி.பி.ஐ. அதிகாரிகள் விமானத்தில் அழைத்து வந்தனர். விஜய் மல்லையாவுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றிரவு மும்பை வந்து சேர்ந்ததாகவும் விஜய் மல்லையா இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *