இலங்கையில் இன்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

நாடளாவிய ரீதியில் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 4 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்தம் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டியது அவசியமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *