இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் நுழைந்த தந்தையும் மகளும்..!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கடல் வழியாக இலங்கைக்கு பிரவேசித்துள்ளனர்.
33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய அவரது மகளுமே இவ்வாறு நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் வழியாக நாட்டுக்குள் பிரவேசித்த இவர்கள் காவல்துறையில் சரணைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் மன்னாரில் வசித்தவர் என்பதோடு 1990ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்று தமது மனைவி மகள்களுடன் அகதி முகாமில் வசித்து வந்துள்ளார்.
இதேவேளை, படகில் வந்த தந்தையும் மகளும் பூனானியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *