அமெரிக்கா கருப்பின பிரஜை கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க காவற்துறை தடுப்பில் இருந்து, இறந்த கறுப்பின அமெரிக்க பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அமெரிக்க பிரஜை இருதய நோயினால் உயிரிழந்ததாக கடந்த 25 ஆம் திகதி காவற்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
இந்தநிலையில், உயிரிழந்த கருப்பின அமெரிக்க பிரஜையின் பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து மற்றும் இருதய பகுதிகளுக்கு அலுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இது கொலை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கருப்பின அமெரிக்க பிரஜை காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் உக்கிரமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 40 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க், சிக்காகோ, பில்லர்டெல்பியா மற்றும் லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களில் கலகம் அடக்கும் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டதுடன் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நகரங்களில் காவல்துறையின் வாகனங்கள் எரியூட்டப்பட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *