பொதுத்தேர்தலுக்கான மனுக்கள் தள்ளுபடி!

பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடிசெய்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஜுன் 20 ஆம் திகதி தேர்தலை  நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மார்ச் 2 ஆம் திகதி விடுத்த வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றை செல்லுபடியற்றதாக்குமாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்மீதான பரிசீலனை இன்று (02) 11 ஆவது நாளாகவும் நடைபெற்றது.

பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதியரசர்கள் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாகவே இன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மேற்படி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக உத்தரவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *