போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்!

போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்..

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரை பாதுகாக்க, நிலத்தடி பதுங்கு குழிக்கு கொண்டு சென்றதாக இரகசிய சேவை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர், அவர்கள் மேல் மாடிக்கு கொண்டு வரப்பட்டதாக சேவை முகவர்கள் தெரிவித்தனர்.

ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி மற்றும் சட்ட அமுலாக்க ஆதாரத்தை மேற்கோள் காட்டி, நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் ஆகிய ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன.
ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவிலுள்ள முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
15 மாநிலங்களில் சுமார் 5,000 தேசிய பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் விமான படைவீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *