தந்தை ஆகப் போகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா

பிரபல கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த ஜனவரி 2ம் தேதி கடலில் ஒரு சிறிய படகில் வைத்து காதலிக்கு புரபோஸ் செய்து அந்த புகைப்படங்களை “Starting the year with my firework என்று வெளியிட்டார்.

இன்றோடு மே மாதம் நிறைவுறுகிறது. அதுக்குள் அப்பா ஆயிட்டார். செர்பியன் மாடலான இவரின் காதலி இவர் 2012ல் இந்தியாவுக்கு வந்து பாலிவுட் சினிமாவில் ஐட்டம் சாங் ஆட, நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தது.

அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், தனது காதலி கர்ப்பம் அடைந்தது குறித்து பாண்ட்யா தனது ட்விட்டரில், “நடாசாவும் நானும் சேர்ந்து ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு புதிய உறவை மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் வரவேற்க நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு செல்ல நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் ஆசீர்வாதங்களையும் விருப்பங்களையும் நாடுகிறோம்” என்று மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பலரும் பாண்ட்யாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க, இந்திய அளவில் பாண்ட்யா டிரெண்டிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *