பலவந்தமாக கர்ப்பமாக்கப்படும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சந்தையில் விற்பனை!

நைஜீரியாவின் லாகோஸ் நகரத்தில் பல பெண்கள் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகளை விற்கின்ற சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு கொண்டு செல்லப்படும் பெண்கள் பல ஆண்களால் சீரழிக்கப்படுகின்றதாகவும் அப்படி செய்தும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் மேலும் பல ஆண்களை அழைத்து வந்து பலமுறை சீரழித்துள்ளனர்.
இதற்கு சம்மதிக்காத பெண்களை சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் கர்ப்பம் அடைந்து பிறக்கும் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சந்தையில் விற்று விடுகின்றனர்.
இந்த தகவல் அனைத்தும் அங்கிருந்த தப்பி வந்து போலீசாரிடம் தஞ்சம் அடைந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பல பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இங்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு அதிக தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறுவதாகவும் அதுபோல் பணமும் தருவதில்லை என கு ற்றம் சாட்டினார்.

மேலும் இங்கிருக்கும் பெண்கள் சிலர் விபச்சார தொழிலுக்காக விற்கப்படுவதாகவும் அப்பெண் தெரிவித்தார் .
இந்நிலையில் லாகோஸ் நகரம் மட்டுமின்றி நைஜீரியாவின் பல நகரங்களின் இந்த கொடூர சம்பவம் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 160 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் அதிர்ச்சி தகவல் ஒன்றினையும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *