காட்டிக் கொடுத்த ஐ.தே.கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் இலாபம் தேடுகின்ற ஐ.தே.க.வைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒன்று கூடிய ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் , 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளனர். இவர்களாலேயே குறித்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களில்   ஈடுபட்டு வரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும், இந்த குழுவினின் மோசடிகரமான செயற்பாடுகளினால்,
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்.
மக்கள் பிரதிநிதிகளை வழித்தவறச் செய்து செயற்குழு தீர்மானங்கள் ஊடாக அவர்களை ஏமாற்றுதல்.
செயற்குழுவின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்படுதல்.
அரசாங்கத்துடன் இணைந்து கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டமை.
தொடர்பிலே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சமப்படுத்திக் கொண்டு , ஐ.தே.க.வை கைப்பற்றிக் கொண்டுள்ள குழுவிடமிருந்து அதனை மீட்டு , மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமன்றி அனைத்து உறுப்பினர்களதும் சட்டம் மற்றும ஏனைய சலுகைகளைஇலவசமாக பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *