இலங்கையில் ஞாயிறு ஈஸ்டர் தாக்குதல் பத்து நாட்களுக்கு முன்பே தெரியுமாம்!

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகம் உள்ளிட்ட இடங்கள்மீது ஸஹ்ரான் உள்ளிட்ட 6 பேர் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர் என்று மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சந்தன முனசிங்க 10 நாட்களுக்கு முன்பே தன்னிடம் தெரிவித்தார் என்று மேல் மாகாண புலனாய்வு பணிப்பாளர் பி.ஜே.கே.அபய விக்ரம ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் வழங்கினார்.
இது தொடர்பான முறையான தகவல் கிடைக்காததால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என்றும் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லை என்றும் அவர் நேற்று கூறினார்.
ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 100 பேர் இலங்கையில் உள்ளனர் என்ற தகவல் 2015 மற்றும் 2016 ஆகிய காலப்பகுதியில் தமக்குக் கிடைத்தது என்று கூறிய அவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் துருக்கி ஊடாக சிரியாவுக்கு அனுப்பப்படும் விடயம் தமக்குத் தெரியாது என்று சொன்னார்.
குண்டுத் தாக்குதலுக்கு முதல் நாள் இரவு தாக்குதல் காலையில் இடம்பெறவுள்ளது என்ற தகவல் பொலிஸிற்கு கிடைத்தது.ஆனால், பிரிவுக்குக் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *