மண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்ததால் கொலையில் முடிந்தது

மல்லிகை தோட்டத்தில் பிணமாக கிடந்தாள் அந்த பெண்.. ஆசைக்கு இணங்க மறுத்த அவளை கல்லாலேயே அடித்து கொன்றுள்ள பயங்கரம் நடந்துள்ளது.. அந்த குழந்தைக்கு வயசு 9… கொலை செய்தவரின் வயசு 14.. இது திருச்சி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம். சிறுவனின் தந்தை ஏகப்பட்ட ஆபாச படம், நிர்வாண வீடியோக்களை பார்ப்பவராம்.. செல்போனில் இதே வேலையாக இருந்திருக்கிறார்.. அப்படித்தான் ஒருநாள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, அப்படியே செல்போனையும் வைத்துவிட்டு சென்றுள்ளார்.. அதை சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்து பார்த்துவிடவும், அதே பழக்கமாகி உள்ளது.
மனசு பூராவும் விகாரமெடுக்க ஆரம்பித்தது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவருக்கு முத்தம் தரும் காட்சியும் இருந்துள்ளது.. அதை பார்த்தபிறகு விபரீதம் தலைதூக்கி உள்ளது. அதை எப்படியாவது செயல்படுத்த பிளான் செய்தபோதுதான், 3-ம்கிளாஸ் படிக்கும் சிறுமி மீது கவனம் விழுந்துள்ளது. அந்த சிறுமி மல்லிகை தோட்டத்துக்கு தனியாக வருவதை கண்டதும், சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் தந்து தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றபோது சிறுமி கதறி அழுதிருக்கிறாள்.. அப்போதுதான் யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்துபோன சிறுவன், கல்லை எடுத்து அடித்து கொன்றிருக்கிறான்..
ரத்த காயத்துடன் நேற்று முன்தினம் குழந்தை துடித்து கொண்டிருந்தாள்.. தலையில் மட்டும் நிறைய காயங்கள் கிடந்தன. முனகல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. தோட்டடத்தில் உயிருக்கு சிறுமி போராடிக் கொண்டிருப்பதாக ஒரு சிறுவன் பதறியடித்து கொண்டு, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து சென்று சிறுமியை திருச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. ஆனால் பலனின்றி இறந்துவிட்டாள். விஷயம் மணப்பாறை போலீசுக்கு எட்டியது. சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.. அங்கு ரத்தக்கறை படிந்த ஒரு ஷர்ட் இருந்தது.. இந்த சட்டைதான் அவர்களுக்கு கிடைத்த ஒரே க்ளூ.. சட்டை யாருடையது என்று விசாரிக்க தொடங்கியபோதுதான், சிறுவனின் சட்டை என தெரியவந்தது.
வளர்ப்பு சரியில்லை என்று சொல்வதா? பெற்றோர் கண்காணிக்க தவறிவிட்டனர் என்று சொல்வதா? செல்போனில் நிரம்பி வழியும் ஆபாசத்தை சொல்வதா? ஆபத்தை தரும் மித மிஞ்சிய அறிவியல் வளர்ச்சியை சொல்வதா? எதை சொல்ல? என்னத்த சொல்ல? ஆனால் அந்த பிஞ்சு குழந்தை இன்று நம்முடன் இல்லை! எனவே இந்த விடையத்தில் தாய் தந்தையர்கள் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.