சர்வதேசத்திற்கு எச்சரிக்கை விடுத்தார் ஜனாதிபதி கோத்தபாய

இராணுவத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்களிலிருந்து வௌியேறுவதற்கு தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

11 ஆவது தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, Admiral of the Fleet வசந்த கரன்னாகொட, Marshal of the Air Force ரொஷோன் குணதிலக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வருகை தந்ததை அடுத்து இந்த நிகழ்வு ஆரம்பமானது.

சுதந்திர இலங்கையை உருவாக்குவதற்காக 30 வருட யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் இதன்போது நினைவுகூரப்பட்டனர்.

இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் முதலில் மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *