உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.24 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.24 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 324,535 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,982,875 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,956,361 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,443 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101,139 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,163 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 39,174 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 93,533 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,570,583ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,169 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226,699 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,778 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 278,803 ஆக அதிகரித்துள்ளது.
  • ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,837 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 299,941 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,022 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180,809 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,341 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248,818 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,119 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124,603 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,108 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,791 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177,827 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,249 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 82,960 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,954 ஆக அதிகரித்துள்ளது.
  • துருக்கியில் 4,199 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,891 பேரும், பிரேசில் நாட்டில் 17,983 பேரும், சுவீடன் நாட்டில் 3,743 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,561 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,332 ஆக அதிகரித்துள்ளது.
  • போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,247 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *