முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிசிஆர் பரிசோதனை!

சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து மே 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட பிணை, மேல் நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்தே அவர் கைதானார்.

இதனையடுத்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதன்படி நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

‘கொரோனா’ வைரஸை பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில், புதிதாக விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகள், சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உத்தரவிடப்பட்ட சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகின்றனர். இதற்கமையவே ராஜிதவும் தற்போது சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

21 நாட்களுக்கு பின்னர் அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என சிங்கள வாரஇதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *