நினைவேந்தலுக்குத் தடை யாழ்.நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போர் முடிந்து நாளையுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், மக்களை கூட்டி நினைவேந்தல் எதனையும் நாளை செய்யக்கூடாது என்கிற தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா், கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன்
தேசிய அமைப்பாளா், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்
சட்ட ஆலோசகா் சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ்
சட்ட ஆலோசகா் சட்டத்தரணி நடராசா காண்டீபன்
யாழ். மாநகரசபை உறுப்பினா் வரதராஜன் பாா்த்தீபன்
யாழ். மாநகரசபை உறுப்பினா் தனுசன்
யாழ். மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன்
கனகசபை விஸ்ணுகாந்
சுதாகரன்
தமிழ்மதி
ஆகியோரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான கட்டளை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு குருநகா், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகிய இடங்களில் நேற்று அஞ்சலிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்தியமையால் இந்தக் கட்டளை நீதிமன்றால் ஆக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *