சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை விபரம் வெளியாகியுள்ளது

சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்துக்கும் மேல் என உண்மையான விவரம் வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள்.

என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில் 81 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,310-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 84,029 என்றும் பலி எண்ணிக்கை 4673 என அதிகாரப்பூர்வ கணக்குகள் வெளியிட்டது.
சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா சீனாவை விட அமெரிக்கா, பிரான்ஸ்,இத்தாலி, ஸ்பெயின், நாடுகளில் அதிக உயிச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக பாதிப்பும் , இறப்பு எண்ணிக்கையும் பதிவாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்று ஏற்கனவே அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தங்கள் நாட்டில் நிகழ்ந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த உண்மையான தகவல்களை மூடி மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அமெரிக்க குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் பென் செஸ்சே, மைக்கேல் மெக்கால் ஆகியோர், புலனாய்வு துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது. இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் தற்போது கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள்.இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு புள்ளிவிவரத்தில் சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *