இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

இன்று (16) இரவு 8 மணி முதல் 18 ஆம் திகதி காலை 5 மணிவரை நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத்தவிர ஏனைய 23 மாவட்டங்களிலும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் கடந்த 11 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும், காலை 5 மணி முதல் 15 மணிநேரம் அது தளர்த்தப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், மே 17 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே இன்று இரவு 8 மணி முதல் 18 காலை 5 மணிவரை ஊடரங்கு அமுலில் இருக்கும்.

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களைத்தவிர ஏனைய மாவட்டங்களில் 18 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நடைமுறை மே 23 ஆம் திகதிவரை தொடரவுள்ளது.

கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் 16 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும். அதன்பின்னர் 18 முல் மீண்டும் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *