எதிர்வரும் மே 30 க்குப் பிறகு குவைத் படிப்படியாக இயல்பு நிலைக்கு திருப்பும்

மே 30 க்குப் பிறகு குவைத் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாக குவைத் பிரதமர் ஷேக் சபா கலீத் அல் – அஹ்மத் அல் சபா அவர்கள் அறிவிப்பு..

*முழு ஊரடங்கு உத்தரவின் பின்னணியில் உள்ள காரணங்களை புரிந்து கொண்ட குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா நன்றி தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களில் மே 30 க்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாக குவைத் பிரதமர் கூறினார் .

  • மசூதிகளில் பிரார்த்தனை தடை, வேலை இடங்களை மூடுதல் , எல்லைகளை மூடுவது மற்றும் வெளிநாட்டவர்கள் முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு தாயகம் புறப்படுவது போன்ற “மிகவும் கடினமான” நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டியிருந்தது.
  • ஊரடங்கு உத்தரவு மீதான நாட்டு மக்களின் அர்ப்பணிப்பு “சாதாரண வாழ்க்கையை விரைவாகவும் படிப்படியாகவும் மீட்டெடுக்க வழிவகுக்கும்.
  • மருத்துவ மனையில்களில் படுக்கை வசதிகள் மற்றும் ஐ.சி.யுகளின் திறனை அதிகரிக்கும் (MOH) சுகாதாரத்துறையின் திட்டங்கள் பற்றிய சந்திப்பு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி பேசப்பட்டது, குவைத் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சேமித்து வைத்திருப்பது போதுமானது என்று குறிப்பிட்டனர்.
  • நடைபெற்ற கூட்டம் குறித்து அமைச்சரவைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்படும். தற்போதைய மற்றும் எதிர்கால சுகாதாரத் திட்டங்களை மறுஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட கூட்டமாக இருந்து.
  • கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வர அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், குவைத் இராணுவம், தேசிய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும் குவைத் நாட்டு அரசு ஊடகங்கள், நகராட்சி மற்றும் வர்த்தக மற்றும் சமூக விவகார அமைச்சகங்களை பாராட்டினார்.
  • கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் ஒரு மோசமான சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பதை எல்லோரும் உணர்கிறார்கள். பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப உள்ளது.
  • இந்த நெருக்கடியை நிர்வகிக்க எங்களுக்கு உதவும் சட்டமன்ற கூட்டங்களை நாங்கள் நடத்த வேண்டும் மற்றும் சட்டங்களை அங்கீகரிக்க வேண்டும், மேலும் இந்த காலகட்டத்தில் நடந்த ஒப்பந்தங்கள் உட்பட அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எம்.பி.க்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று குவைத் பிரதமர் ஷேக் சபா கலீத் அல் – அஹ்மத் அல் சபா அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *