ஆஸ்திரியா இளவரசி மரியா கலிட்சின் மாரடைப்பால் திடீர் மரணம்

ஆஸ்திரியா பேரரசர் கார்ல் வம்சாவளி இளவரசி மரியா கலிட்சின் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 வயதான இளவரசி மரியா கலிட்சின், சமையற்கலைஞரும் இந்தியா வம்சாவளி கணவருமான ரிஷி ரூப் மற்றும் 2 வயது குழந்தையுடன் ஹூஸ்டன் நகரில் குடியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மே 4 ஆம் திகதி, அவரது 32-வது பிறந்தநாளுக்கு 6 நாட்கள் முன்னர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இளவரசியின் மரணம் தொடர்பில் ஹூஸ்டன் நாளேடுகளில் அஞ்சலி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் ஹூஸ்டனில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா அரச குடும்பத்தில் 1988 ஆம் ஆண்டு பிறந்த இளவரசி மரியா கலிட்சின் தந்தை ரஷ்ய பிரபு வம்சத்தில் பிறந்தவராவார்.
ஆஸ்திரியாவின் கடைசி பேரரசரான முதலாம் சார்லசின் இளையமகனான ருடோல்ஃபின் மகள் தான் இளவரசி மரிய கலிட்சின் தாயார்.
முதல் உலகப் போரைத் தொடர்ந்து ஆஸ்திரியாவின் கடைசி பேரரசரான முதலாம் சார்லஸ் குடும்பத்துடன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார
ஹூஸ்டனில் குடியேறிய பின்னர் மிகவும் சாதாரண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர் இந்த ஆஸ்திரியா அரச குடும்பம்.
அரச திருமணங்களில் அழைக்கப்படும்போது மட்டுமே தாங்கள் அரச குடும்பத்து உறுப்பினர்கள் என்ற நினைவு வருவதாக இளவரசி மரியாவின் சகோதரி ஒருமுறை தெரிவித்துள்ளார்.
இளவரசி மரியா பிரஸ்ஸல்ஸ் மற்றும் சிகாகோ நகரங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஹூஸ்டனில் குடிபெயர்ந்துள்ளார்.

ஹூஸ்டனில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் முதன்மை சமையற்கலைஞராக பணியாற்றும் ரிஷி ஷிங் என்பவரை சந்திக்க நேர்ந்த மரியா,
2018 ஏப்ரல் 22 ஆம் திகதி பெற்றோர் ஒப்புதலுடன் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு சில மாதங்கள் முன்னரே தங்களது முதல் குழந்தையான மாக்சிமை பெற்றெடுத்துள்ளார் இளவரசி மரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *