உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 297,765 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,425,639 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,657,716 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,921  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,415 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 24,386 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,176 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 85,197 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,430,348 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,106 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 222,104 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,104 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271,095 ஆக அதிகரித்துள்ளது.
  • ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,212 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242,271 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,074 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,060 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,186 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229,705 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,783 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112,725 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,843 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,981 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,861 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174,098 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,562 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,211 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,926  ஆக அதிகரித்துள்ளது.
  • துருக்கியில் 3,952 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,870 பேரும், பிரேசில் நாட்டில் 13,158 பேரும், சுவீடன் நாட்டில் 3,460 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,302 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,497 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,926 ஆக அதிகரித்துள்ளது.
  • போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,175 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *