கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆண்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆண்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஐரோப்பிய ஆய்வின் முடிவுகள் கண்டறிந்து விளக்கியுள்ளன.

உயிரணுக்களைப் பாதிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படும் முக்கிய இரசாயன பொருட்கள் பெண்களை விட ஆண்களின் இரத்தத்தில் அதிக அளவு உள்ளது என பெரிய ஐரோப்பிய ஆய்வின் முடிவுகள் காண்பித்தன.

இந்த கண்டுபிடிப்பு கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆண்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்க உதவுகிறது.

Angiotensin-converting enzyme 2 (ACE2) என்ற இரசாயன பொருட்கள் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளில் காணப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று நுரையீரலில் பரவுவதில் Angiotensin-converting enzyme 2 (ACE2) என்ற இரசாயன பொருட்கள் பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், ACE inhibitors or aangiotensin receptor blockers (ARBs) எனப்படும் பரவலாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அதிக ACE2 செறிவுகளுக்கு வழிவகுக்கவில்லை என்றும், எனவே அவற்றை எடுத்துக்கொள்ளும் மக்களுக்கு கொரோனா ஆபத்தை அதிகரிக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *