கத்தாரில் பணிபுரியும் ஊழியர்கள் அன்­றாட உண­வுக்­கா­கக் கையேந்­தும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.


கொரோனா வைரஸ் பரவல் கத்தாரில் அதிகரித்துள்ள நிலையில் கத்தாரின் தற்போதைய நிலை பற்றி இங்கிலாந்தின் பிரபல www.theguardian.com செய்தியை சுருக்கமாக இங்கு பதிவிடுகின்றோம்.குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் நிறைந்த வளமான நாடு கத்தார். கொரோனா தொற்று பர­வ­லால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் மத்­திய கிழக்கு நாடான கத்­தா­ரும் ஒன்று. கத்தாரில் பரிசோதனை செய்யப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அங்கு பல­ரின் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் ஏரா­ள­மா­னோர் வேலை­யி­ழந்து விட்­ட­னர்.இந்­நி­லை­யில் வெளி­நா­டு­களில் இருந்து அங்கு வேலைக்குச் சென்­றி­ருந்­த­வர்­களில் பல­ரும் தங்­க­ளது அன்­றாட உண­வுக்­கா­கக் கையேந்­தும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். 20க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் அந்­நா­ளி­தழின் செய்­தி­யா­ளர் பேசி­னார்.திடீ­ரென வேலை­யி­ழந்­து­விட்­ட­தால் செய்­வ­த­றி­யாது அலைந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் சொந்த நாட்­டுக்­கும் திரும்­பிச் செல்ல முடி­யாத நிலை­யில் ஒவ்­வொரு வேளை உண­வுக்­கும் தங்­க­ளது முன்­னாள் முத­லா­ளி­க­ளை­யும் அற­நி­று­வ­னங்­க­ளை­யும் நம்பி இருப்­ப­தா­க­வும் அவர்­கள் கூறி­னர். அவர்­களில் பிலிப்­பீன்ஸ் நாட்­டைச் சேர்ந்த அழகு நிலைய ஊழி­யர் ஒரு­வர், பசித்த வயி­றுக்கு உண­வ­ளிக்க தமது முத­லாளி மறுத்து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.என்றாலும், ஏறக்குறைய அனைத்து வழக்குகளும் லேசானவை என்று, மேலும் இறப்பு விகிதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன, வெறும் 13 இறப்புகள் மட்டுமே என்பதாகவும் கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *