ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையான பயண தடை நீடிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான எல்லைகள் ஊடாக பயணிப்பதற்கான கட்டுப்பாடுகள், குறைந்தபட்சம் ஜூன் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்படுமென என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான எல்லைகள் விரைவில் ஏதோவொரு வகையில் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அசாதாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஆணையம், கூட்டணியின் நிர்வாகக் கிளை, பயணத்தைத் தடையை இன்னும் 30 நாட்களுக்கு நீடித்துள்ளது.

ஆனால், இவ்வாறான தடைகள் மூலம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஷெங்கன் மண்டலத்தின் 26 நாடுகளில் குறைந்தது 17 நாடுகளில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் உள்ளன.

இதேவேளை ஷெங்கன் மண்டலம் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் பிற நாடுகளையும் ஒன்றிணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *