உயிரிழந்த முஸ்லிம் இளைஞரை தகனம் செய்ய முயற்சித்த நிலையில் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது

கொழும்பில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வபாத்தான (வயது 35) பிர்தௌஸ்  என்ற இளைஞருடைய ஜனாஸாவை,  தகனம் செய்ய முயற்சித்த நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை நடாத்துமாறு கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உத்தரவிட்டார்.

குறித்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என, அவரது  குடும்பத்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சிறு வயது முதல் சிறுநீரக பாதிப்பால் அவதியுற்றிருந்து கடந்த 05ம் திகதி கொழும்பு, சென்ட்ரல் ரோட் பகுதியில் உயிரிழந்த எம். பிர்தௌஸ் எனும் சகோதரரின் ஜனாஸா கையளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டிருந்த சம்பவம் நாம் அறிந்ததே.

இவ்விடயம் ஊடகங்களின் மூலம் வெளிக்கொனரப்பட்டதுடன் அரசின், சுகாதார அமைச்சின் பல்வேறு மட்டங்களுக்கும் இத்தகவல் சமூகப் பிரமுகர்களால் எத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று குறித்த நபருக்கு கொரோனா தொற்று எதுவுமில்லையென உறுதி செய்யப்பட்டு ஜனாஸாவை அடக்குவதற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், வபாத்தாகியிருந்த போது, வேறு ஒருவருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையைக் காட்டி உடலத்தை உடனடியாக எரிக்க வேண்டும் என வைத்திய அதிகாரி அடம் பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இறந்தவருக்கு கொரோனா தொற்றிருந்தமையை உறுதி செய்யும் வகையில் சான்றிதழ் தந்தால் மாத்திரமே அதற்கு இணங்க முடியும் என குடும்பத்தார் மறுத்து வந்த நிலையில், காட்டப்பட்டது வேறு உடலம் எனவும் அறியப்பட்டிருந்தது.
அதன் பின், புதிதாக பரிசோதனைகளை ஆரம்பிப்பதாகக் கூறி, மூன்று தினங்கள் இழுபறியின் பின் இறந்தவருக்கு கொரோனா இல்லையென உறுதி செய்து உடலம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இலங்கை ஜனாஸா சங்கம் பொறுப்பேற்று மாளிகாவத்தையில் அடக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உமர் கத்தாப் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *