டிக்கோயா லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதம்


டிக்கோயா, வனராஜா – மணிக்கவத்த தோட்டத்திலுள்ள 20 வீடுகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் இன்று (09) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏனைய சில வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. அத்துடன், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தீவிரமாக செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பெரும் அனர்த்தத்தை தடுத்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
