சமூக இடைவெளி குறித்து அறிவியல் என்ன சொல்கிறது ?

பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர்.

அதே நேரம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதால், முடக்கநிலைக்குப் பிறகு பணியிடங்களுக்கு திரும்பி செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டியது அவசியமில்லை என அலுவலகங்கள் முடிவுசெய்தால் தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விரைவில் இது தொடர்பாக அறிவியலாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் வெளிவர உள்ளன. இந்த ஆய்வறிக்கை வைரஸ் பரவுவது குறித்து இது வரை நாம் தெரிந்துகொள்ளத பல அபாயகங்களை சுட்டிக்காட்டும். இது பலருக்கு வைரஸ் குறித்த பயத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

சமூக இடைவெளி குறித்து அறிவியல் என்ன சொல்கிறது ?

சமூக இடைவெளி என்பது வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதத்தில் வரையறுக்கப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால் வைரஸ் தொற்று உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

உலக சுகாதார நிறுவனம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. வேறு சில நாடுகளில் 1.5 மீட்டர் என்றும் 1.8 மீட்டர் என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனர். பிரிட்டனில் 2 மீட்டர் சமூக இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.

சமூக இடைவெளியும் கொரோனா வைரஸும் : 2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?

ஆனால் உண்மையில் இடைவெளியைப் போலவே மற்றொருவருடன் நாம் தொடர்பில் இருக்கும் நேரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று உள்ளவர்களுடன் ஒரு நிமிடம் முகத்திற்கு நேராக நின்று உரையாற்றுவதே ஆபத்துதான். ஒரு மீட்டர் இடைவெளியில் 2 வினாடிகள் நின்று ஒருவரை பார்ப்பதும் 2 மீட்டர் இடைவெளியில் ஒரு நிமிடம் உரையாடுவது ஒரே அளவு ஆபத்தானது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

2 மீட்டர் சமூக இடைவெளி எவ்வளவு பழமையான விதிமுறை ?

நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக 1930களிலேயே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டுள்ளது.

இருமல் அல்லது தும்மல் காரணமாக வெளிவரும் எச்சில் நீர்துளிகள் காற்றில் கரைந்து விடும். அல்லது புவி ஈர்ப்பு சக்தியால் கீழே விழும். பெரும்பாலும் எச்சில் துளிகள் ஒரு மீட்டர் அல்லது இரண்டு மீட்டர் தூரத்துக்குள் தரையில் விழுந்துவிடும்.

இதனாலேயே ஒருவர் இருமும்போது நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தீர்கள் அல்லது தரை வழியாக தொற்று பரவியதா என்ற சந்தேகம் எழுகிறது. பொதுவாக தரை மற்றும் மேஜை நாற்காலிகளின் மேற்பரப்பில் படிவதன் மூலமே வைரஸ் தொற்று பரவுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் எச்சில் துளிகளின் மூலம் மட்டும் பரவுவதில்லை என்று கூறுகின்றனர். தொற்று உள்ளவர்களின் மூச்சுக் காற்று சுற்றுச்சூழலில் உள்ள காற்றில் கலக்கும்போது தூரத்தில் இருப்பவர்களுக்குகூட வைரஸ் பரவுகிறது என கூறப்படுகிறது. காற்றில் உள்ள சிறிய துகள்களான ஏரோசோல்ஸ் மூலமும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீனாவின் மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் கொரோனா நோயாளிகள் இருந்த இடத்தில் இருந்து நான்கு மீட்டர் தொலைவிலும் தரையில் மற்றும் சுற்றி இருந்த பொருட்களிலும் வைரஸ் இருப்பது தெரியவந்தது. எனவே இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 4 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது நல்லது என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *