கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டு வருடங்கள் வரை இருக்கும்

கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் 18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை இருக்குமென அமெரிக்காவின் நீண்டகால ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேரை கொரோனா வைரஸ் பாதிக்க உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் எதிர்வரவுள்ள குளிர் மற்றும் மழை காலங்களில் பெரிய விளைவை சந்திக்க நேரிடுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என நினைக்கும் தருவாயில் கூட மக்கள் அமெரிக்காவில் கொத்துகொத்தாக மடிய வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.

மின்னேசோட்டா பல்கலை., விஞ்ஞானி மைக் ஆஸ்டர்ஹோம் கூறுகையில் உலக மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேரை பாதிக்காமல் கொரோனா வைரஸ் உலகை விட்டு அடங்காது எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்டர்ஹோம் காற்றில் பரவும் நோய்கள் குறித்து பல வருடங்களாக உலக நாட்டுத் தலைவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தின் தோல் நோய் நிபுணர் மார்க் லிப்சிட்ச், சிடிசி தோல் நோய் நிபுணர் கிரிஸ்டைன் மூர் ஆகியோரும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர் ஜான் பாரி 2004ம் ஆண்டு எழுதிய புத்தகம் ‘தி கிரேட் இன்புளுயன்ஸா’. 1918ம் ஆண்டு புளு வைரஸ் அமெரிக்காவில் பரவியபோது அது எவ்வாறான தாக்கதை ஏற்படுத்தியது என அவர் அதில் விளக்கி இருப்பார்.

இதேபோன்ற தாக்கத்தை தற்போது 2020ம் ஆண்டு கொரோனா ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோவிட்-19 புதிதாக உண்டாகிய வைரஸ் என்பதால் உலக மக்களிடம் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட இன்னும் 18-24 மாதங்கள்வரை ஆகுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. உயிர்கொல்லி வைரஸ் ஆனாலும் சரி, புளு போன்ற சாதாரண வைரஸ் ஆனாலும் சரி, நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் பெற பல மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *