உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.33 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.33 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 233,839 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,304,381 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,039,144 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 50,947 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 8,373 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,363 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,258 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,095,019 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,967 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205,463 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24,543 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 239,639 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24,376 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167,178 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,771 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171,253 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,028 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,640 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,594 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,519 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,623 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163,009 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,795 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,316 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,874 ஆக அதிகரித்துள்ளது.
  • துருக்கியில் 3,174 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,737 பேரும், பிரேசில் நாட்டில் 5,901 பேரும், சுவீடன் நாட்டில் 2,586 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,184 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,232 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,732 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *