கொரோனா வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவி இருக்கிறது என்பதை கண்டுப்பிடிக்க மோப்ப நாய்களை பயண்படுத்த திட்டம்

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அதை தடுக்க பல நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் மருந்தை கண்டுபிடிக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அறிகுறியான தும்மல், இருமல், ஜலதோஷம், தொண்டை வலி என குறிப்பிட்டனர். அதன் பின்னர் சில வகைகளும் பரவுகிறது என கூறியிருந்தனர். மேலும் அறிகுறிகள் இல்லாமலே கொரோனா பரவி வருகிறது என மருத்துவர்கள் கவலை அடைந்தனர்.

இதையடுத்து கொரோனா வைரஸை எப்படி ஒருவருக்கு பரவி இருக்கிறது என்பதை கண்டுப்பிடிக்க புதிய முயற்சியாக நாய்க்கு மோப்ப சக்தி பயிற்ச்சியளிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

லண்டன் சுகாதார மருத்துவ பள்ளி, இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகம், மருத்துவ பயன்பாட்டுக்கான நாய்கள் அமைப்பு ஆகியவை செய்த ஆய்வை அடிப்படையாக கொண்டு அறிக்கை ஒன்று கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரபல பத்திரிக்கையில் கூறியதாவது;

கொரோனா தொற்று இருப்பதை கண்டறிய நாய்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான முதல் கட்ட சோதனை நிறைவடைந்ததும் 6 நாய்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

மனிதர்களை மோந்து பார்த்து அதன் அடிப்படையில் சம்பந்தபட்ட நபருக்கு கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இதன் மூலம் மணிக்கு 750 பேருக்கு நோய் உள்ளதா என்பதை கண்டறியமுடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக லண்டன் சுகாதார மருத்துவ பள்ளியின் நோய் கட்டுப்பாட்டு துறை தலைவர் ஜேம்ஸ் லோகான் கூறுகையில்,

”கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர் உடலில் வாசனை இருக்குமா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் சுவாசம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்களின் உடல் வாசனை மாறுபடும் என்பதால் அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே கேன்சர், மலேரியா, பர்கின்சன் நோய் பாதித்தவர்களை அறியும் சோதனையில் நாய்கள் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *