இலங்கையில் நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

அனைத்து மாவட்டங்களில் நாளை (30) இரவு 8 மணி முதல் மே 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத்தவிர ஏனைய 21 மாவட்டங்களில் மார்ச் 27 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டது.

இதன்படி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலுக்குவரும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மே முதலாம் திகதிவரை இந்த நடைமுறை தொடரும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அந்த முடிவு மாற்றப்பட்டு நாளை இரவு  8 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது என்றும், மே 4 ஆம் திகதி காலை 5 மணிவரை அது அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் மே 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *