இலங்கையில் இருவாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து மக்களை முடக்குங்கள்

ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்துவது சிறந்தது என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடற்படையில் இருந்து 800 கடற்படை வீரர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் 10 பேருடன் பழகியிருந்தால் மொத்தமாக 8000 பேர் வரை பழகியவர்கள் வட்டம் காணப்படும்.
எனவே அவற்றைத் தேடி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க – தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள் முடக்கி வைக்க வேண்டும். அதற்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்க வேண்டும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *