அடங்காமல் ஆட்டம் போடும் கொரோனா எப்போது அடங்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 211,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,063,269 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 921,427 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,302 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 886 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 6,362 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 56,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,010,356 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,977 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199,414 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,521 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229,422 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,293 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,842 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,092 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157,149 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,806 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,472 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,207 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,687 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,126 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158,758 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,518 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,245 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,830 ஆக அதிகரித்துள்ளது.
  • துருக்கியில் 2,900 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,665 பேரும், பிரேசில் நாட்டில் 4,543 பேரும், சுவீடன் நாட்டில் 2,274 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,707 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,102 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,351 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *