க.பொ.த.சாதரணப் பரீட்சையில் 73.84 சதவீத மாணவர்கள் உயர்தரம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்

2019 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய 5 லட்சத்து 56 ஆயிரத்து 256 மாணவர்களுள் 10 ஆயிரத்து 346 பேர் 9 பாடங்களிலும் சிறப்பு சித்தி (A) பெற்றுள்ளனர்.
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பாடசாலைகளிலிருந்து 4 லட்சத்து 33 ஆயிரத்து 189 மாணவர்களும், 2 லட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பித்திருந்தனர்.

மொத்தமாக 7 லட்சத்து 17 ஆயிரத்து 246 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தாலும், 5 லட்சத்து 56 ஆயிரத்து 256 மாணவர்களுள் 10 ஆயிரத்து 346 பேரே பரீட்சைக்கு தோற்றினர்.
இவர்களில் 73.84 சதவீத மாணவர்கள் உயர்தரம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
66.82 வீதமானோர் கணிதப்பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *