உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 203,269 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,920,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 836,683 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,864 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 5,210 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 54,256 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960,651 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,384 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195,351 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,902 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223,759 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,614 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,488 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,319 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148,377 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,650 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,328 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,917 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,325 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,877 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156,513ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,190 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,827 ஆக அதிகரித்துள்ளது.
  • துருக்கியில் 2,706 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,599 பேரும், பிரேசில் நாட்டில் 4,057 பேரும், சுவீடன் நாட்டில் 2,192 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,465 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,063 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,305 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *