உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்து 72 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி  கண்டறியப்பட்டது. தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனா, கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய கண்டம் ஆகிய பகுதிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்று இப்போது அமெரிக்காவை அதீதமாக பாதித்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்து 72 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,86,912 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,31,750 ஆக உள்ளது. அதிகப்பற்றமாக அமெரிக்காவில் 8,52,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு 48,289 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெல்ஜியத்தில் இன்று ஒரே நாளில் 228 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் விவரம் பின்வருவமாறு;

அமெரிக்கா     46,710     841,056     
இத்தாலி     25,085     187,327     
ஸ்பெயின்     21,717     208,389     
பிரான்ஸ்     21,340     119,151     
பிரிட்டன்     18,100     133,495     
பெல்ஜியம்     6,490     42,797…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *