கடனை செலுத்த முடியாமல் 75ஆயிரம் பசு மாடுகளை விற்கும் ஆபிரிக்க நாடுகள்

வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத். இது லிபியாவுக்கு அருகில் அமைந்துள்ள குட்டி நாடு. எண்ணெய் வளம் இருந்தாலும் கூட அந்த வருமானம், இந்நாட்டிற்கு போதுமானதாக இல்லை. இதனால் அண்டை நாடான அங்கோவிடம் ரூ.760 கோடி அளவுக்கு 2017ல் கடன் பட்டது. ஆனால், இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் சாத் கடும் கஷ்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தன் நாட்டில் ஏராளமாக இருக்கும் பசு மாடுகளை கடனுக்கு பதிலாக தருவதாக அங்கோலாவிடம் சாத் கூறியது. அங்கோலாவில் மாட்டிறைச்சி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அந்நாட்டில் இருந்து பல ஆப்ரிக்க நாடுகளுக்கும் இது அனுப்பப்படுகிறது.இதனால் கடனை வசூலிக்க வேறு வழியில்லாத நிலையில், தன் நாட்டில் இருக்கும் இறைச்சி தொழிலையாவது பலப்படுத்தலாம் என்ற அடிப்பபையில் அதற்கு அங்கோலா ஒப்புதல் அளித்தது.

இதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், அங்கோலாவுக்கு 75,000 பசுமாடுகளை சாத் அனுப்ப வேண்டும். இதன்படி முதல்கட்டமாக 4,500 பசுமாடுகளை சாத் அனுப்பி வைத்துள்ளது. இவற்றை பெற்றுக் கொண்ட அங்கோலா, அவற்றில் நோய் பாதித்த மாடுகளை அனுப்பி வைத்திருக்கிறதா என்று ஆராய்வதற்காக அவற்றை குமின்ஹா நகரில் உள்ள மைதானத்தில் அடைத்து வைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இவை இங்கு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றில் நோய் பாதித்த மாடுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்ததை தொடர்ந்து, அதை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க அங்கோலா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பண்டையக் காலத்தில் நாடுகள் இடையே, பண்டமாற்று இருந்துள்ளதை கேள்விப்பட்டிருப்போம். இப்போது முதல் முறையாக இரு நாடுகள் இடையே பண்டமாற்று முறையில், கடன் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *