கொரோனாவால் இந்திய தமிழ் சினிமாவுக்கு 600 கோடி ரூபா இழப்பு!

கொரோனா பல தொழில்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிற மாதிரி தமிழ்த் திரையுலகையும் பாதித்திருக்கிறது.
கொரோனா பாதிப்பு உறுதியாகி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே, திரையரங்குகள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
பல படங்களைத் தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தார்கள்.
திரைப்படத் தொழிலாளர்கள் அன்றாட வருவாயை இழந்தார்கள்.

சிறு பட்ஜெட் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என்று எல்லாமே வெளியிட முடியாத நிலை உருவாகியிருப்பதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
விநியோகஸ்தர்கள் நூறு கோடிக்கு மேல் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள்.
திரையரங்கு உரிமையாளர்களோ, “மே-3 ஆம் தேதிக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான உத்திரவாதம் இல்லை; பொதுமக்கள் கொரோனா பயத்தில் வரத் தயங்குவார்கள்.
அதனால் எங்களுக்கு சில நூறு கோடி அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள்.
திரையரங்குகளுக்குப் போவதை வாடிக்கையாக வைத்திருந்தவர்கள் தங்கள் கவனத்தை வேறு தொழில் நுட்பங்களுக்குப் பழக்கிவிட்டதால், திரையுலகம் தடுமாறியிருப்பது உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *