மன அழுத்தத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்?

” மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதம் பெரும்பாலும் பரம்பரை மரபணுக்களால் தீர்மானிக்கப்படலாம்.
இல்லாவிட்டால் பாதிப்பான ஒரு சூழ்நிலையில் வளர்ந்தால், ஒருவர் மன அழுத்தம் அதிகமான நபராகவும் மாறலாம்.

மன அழுத்தம் உருவாவதற்கான நெருக்கடி ஒன்று வந்ததும், அதை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.
சிலருக்கு மன அழுத்தத்திற்கான நெருக்கடிகள் இல்லாவிட்டாலும், எந்நேரமும் பதற்றமாகவே இருப்பார்கள்.

எதைப் பற்றியாவது சதா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். போர் வந்தால் என்ன ஆவது என்று கற்பனை உருவாக்கி பயந்து கொண்டிருப்பார்கள்.
காலையில் படுக்கையைவிட்டு தாமதமாக எழுந்து பதற்றமாகக் கிளம்புவார்கள். ஆபிஸிலும் அதே பதற்றம் தொடரும்.

மன அழுத்தம் விளைவுகள்: வீடியோ …மனதில் ஏதோ ஒருவித பயமோ தாழ்வு மனப்பான்மையோ இருந்து உறுத்திக் கொண்டு மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் நம்பும் ஒருவரிடம் உங்களுடைய இந்த நிலையைச் சொல்லலாம்.
சிலருக்கு இன்னொருவரைத் திட்ட வேண்டும் என்று இருக்கும். ஆனால் திட்ட மாட்டார்கள். மனதுக்குள்ளேயே குமுறுவார்கள். இது இன்னும் ஆபத்து.
இந்தப் பொறாமை உணர்ச்சி பலவிதங்களில் சம்பந்தப்பட்ட நபரின் உடலைப் பாதிக்கும். மனச்சோர்வை உண்டாக்கும். பல அலுவலகங்களில் இந்தவிதமான மனச்சோர்வு நிலவுவதைப் பார்க்கலாம்.

அவரவர் தகுதிகளையும் திறமைகளையும் பரிசீலித்து அதற்கேற்ப வேலைப் பங்கீடு இருந்தால், இந்த விதமான மனச்சோர்வு உருவாக வாய்ப்பில்லை.
வேலைகளுக்குப் போகக்கூடிய பெண்களுக்கு இதை விட கூடுதல் மன அழுத்தம். வீட்டு வேலையும் செய்ய வேண்டும், அலுவலக வேலைகளையும் செய்ய வேண்டும்.
ஒரு பெண் என்பதாலேயே அலுவலகத்தில் அவர்கள் அவமானப் படுத்தப்படுவதையும் தாங்கவேண்டும்.
இப்போதெல்லாம் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிற பெண்களைப் பார்க்க முடிகிறது. என்னிடம் வரக்கூடிய நோயாளிகளில் பாதி போ் மன அழுத்தத்திற்கு ஆளாகி வரக் கூடியவர்களே.

சிலருக்கு இதயத்துடிப்பு எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனால், இதயத்தில் கூடுதல் பிரஷர் வந்த மாதிரி துடிப்பார்கள்.
டென்ஷன் வந்தால் அவர்களுக்கு வலி வந்துவிடும். இன்றைக்கு டென்ஷனைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகிறார்கள்.
தியானத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். ஏதோ அரை மணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமே இல்லை.

தியானம் வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்கு பலன் கிடைக்கும். ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவதுதான் தியானம்.
மனஅழுத்தம் நீங்க சிறந்த டிப்ஸ் (mind …தன்னை கொஞ்ச நேரம் மறப்பதற்கே பலா் தியானம் பண்ணுகிறார்கள்.

அப்படி இல்லாமல் தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை மாற்றிக் கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.
ஒருவர் என்னதான் வசதி இருந்தும், பிறருக்குத் தெரியாது என்று தொடர்ந்து தவறு செய்து கொண்டே போனாலும், அவரது மனதின் உறுத்தலிருந்து தப்பிக்க முடியாது. அதுவே தீவிரமான மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதயத்தையும் பாதிக்கிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *