கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 119,599 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,923,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 444,017 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51,740 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 980 பேர் குணமடைந்தனர்.  
  • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 586,866 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,516 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,465 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159,516 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 566 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,756 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170,099 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 547 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,967 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136,779 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 574 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,329 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,621 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 717 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,585 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,303 ஆக அதிகரித்துள்ளது.
  • சீனாவில் 3,341 பேரும், ஜெர்மனியில் 3,194 பேரும், பெல்ஜியத்தில் 3,903 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
  • நெதர்லாந்து 2,823 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 1,296 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,138 பேரும், பிரேசில் நாட்டில் 1,328 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.
  • சீனாவில் 82,249 பேருக்கும், ஜெர்மனியில் 130,072 பேருக்கும் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் கொரோனா தொற்று மீண்டு பரவி வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *