கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இத்தாலியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க மே 3 வரை இத்தாலியில் முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இத்தாலி இருந்து வந்தது. அமெரிக்காவில்(21,969 பேர் உயிரிழப்பு) இந்த நோயின் தாக்கம் அதிகமானதால் இத்தாலி, 19,000-க்கும் மேற்பட்டோரை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இத்தாலியில் 19 ஆயிரத்து 468 பேரும் நேற்று காலை வரை கொரோனா வைரஸ் தொற்றுநோயில் உயிரிழந்துள்ளனர்.நேற்று காலை நிலவரப்படி ஐரோப்பாவில் மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரத்து 700-ஐ நோக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 156,363 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று மட்டும்) 431 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,899-ஐ தொட்டுள்ளது.

இத்தாலியில் பலி எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் குறைந்து வருவது குறித்தும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் தவறாக மதிப்பிட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும்.

இப்போதுள்ள அவசரநிலை என்பது கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பி்ன்புதான் நீக்கப்படும். அங்கு மே 3ஆம் திகதி வரை ஊர்டங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *