உலக கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி துடுப்பாட்டத்தில் அசத்தியவர்கள்

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர் கிரிகெட் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான்கள் என பெயர்பெற்ற ஒரு சில கிரிகெட் வீரர்கள் இருக்கின்றனர்! Garry Sobers முதல் Ravindra Jadeja வரை பந்துவீச்சாளராக இருந்து துடுப்பாட்ட வீரராக மாற்றம் பெற்றவர்களுள் துடுப்பாட்ட ஜாம்பவான்களானது ஒரு சிலர் தான்! தற்காலத்தில் இருக்கும் சிறந்த உதாரணம் ஸ்டீவ் ஸ்மித்!

96 உலக கிண்ணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட சோடி இருக்கவில்லை. மஹாநாம மாத்திரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து செயற்பட மறு முனையில் வீரர்கள் மாற்றமடைந்து கொண்டே இருந்தார்கள்! உலக கிண்ணத்திற்கு முன்னர் சிறந்த ஒரு சோடியை உருவாக்கி விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை கிரிகெட் சபை இருந்தது! பதினைந்து வருடங்களின் பின்னர் இதே போன்றதொரு நிலை மறுபடியும் ஏற்பட்டது! இம்முறை 2011 உலக கிண்ணத்திற்கு தயாராக வேண்டும்!

இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை அணி எடுத்துகொண்ட தீர்மானமானது அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கும்! அவ்வாறான இரு தீர்மானங்களை மிக தைரியமாக எடுத்துகொண்டு அதில் வெற்றியும் கண்டது!

1989 இல் ODI கிரிகெட் இற்குள் நுழைந்து ஆறாம் ஏழாம் எட்டாம் இடங்களில் 38 இன்னிங்ஸ்களில் ஆடி 515 ஓட்டங்களை 13.2 எனும் சராசரியில் பெற்ற ஒரு பந்துவீச்சாளரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறக்கி ஒரு பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டது
இலங்கை அணி! இந்த 38 இன்னிங்ஸ்களில் இடையிடையே மூன்றாம் இடத்திலும் ஆடியது குறிப்பிடத்தக்கது! அந்த பந்துவீச்சாளர் அதன் பின்னர் செய்து காட்டியதொல்லாம் சரித்திரம்!

Left arm Orthodox பந்துவீச்சாளர் ஆக அணியில் இணைந்த சனத் ஜெயசூர்யா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவதாரம் எடுத்து பந்துவீச்சாளர்களை ஓட விட்டார் என்பது உலகறிந்த சாதனை சரித்திரம்! தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்த முதல் 11 இன்னிங்ஸகளில் சனத் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை! எனினும் சனத் மீது கொண்ட நம்பிக்கையை அணி தலைவரும் சரி அணி நிர்வாகமும் சரி கை விடவில்லை! ஆனால் 12 ஆவதில் இன்னிங்ஸில் இருத்து பல தரமான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன!! இந்த சம்பவங்களில் மிக முக்கியமான ஒன்று 1996 உலக கிண்ணத்தில் ஆடிய ஆட்டம்!

சனத் ஜெயசூர்யா தான் பெற்ற ஓட்டங்களில் 71.36 வீதமான ஓட்டங்களை இலங்கையிற்கு வெளியே பெற்றார்! இலங்கையிற்கு வெளியே பெற்ற ஓட்டங்களை இரண்டாக பிரித்து நோக்க வேண்டும். அதாவது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆடுவதற்கு முன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்ததின் பின்! சனத் ஏழாம் எட்டாம் இடங்களில் ஆடும் போது 28 இன்னிங்ஸ்களில் 399 ஓட்டங்களை 14.25 எனும் சராசரியில் குவித்தார்! ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்ததன் பின் 290 இன்னிங்ஸ் களில் 9184 ஓட்டங்களை 32.8 எனும் சராசரியில் குவித்தார்! இதில் 21 சதங்களும் 42 அரை சதங்களும் அடங்கும்! இந்த 9184 ஓட்டங்களுள் 35.59 வீதமான ஓட்டங்களை SENA நாடுகளில் குவித்தார் என்பது கூடுதல் தகவல்!

சனத் சதங்கள் அல்லது அரை சதங்கள் பெற்ற 71 போட்டிகளில் 55 போட்டிகளை இலங்கை அணி வெற்றிபெற்றது! அதாவது சனத் சதங்கள் அரை சதங்களை அடித்தாடிய போட்டிகளில் 77.46 % போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டுள்ளது! இவை அனைத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இலங்கையிற்கு வெளியே பெற்ற சாதனைகள்! ஆனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆன பின் ஒட்டுமொத்தமாக சனத் 12440 ஓட்டங்களை Away/Home என இரண்டிலும் பெற்றார்!

44 இன்னிங்ஸ்களில் middle order அல்லது low order ஆட்டிவிட்டு 390 இன்னிங்ஸ்களில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆடினார் ! இவற்றுள் 71.46 இன்னிங்ஸ்கள் இலங்கையிற்கு வெளியே ஆடப்பட்டவை!

இதேபோன்று ஒரு வருடம் கழித்து டெஸ்ட் இலும் சனத் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்பட்டார்! டெஸ்ட் இலும் தன்னை நிருபிக்க தவறவில்லை! ஆரம்ப துடுப்பாட்ட வீரராக 152 இன்னிங்ஸ்களில் 41.88 சராசரியில் 5932 ஓட்டங்களை தனக்காகவும் அணிக்காகவும் குவித்தார்! இந்த 5932 ஓட்டங்களில் 2355 ஓட்டங்கள் இலங்கையிற்கு வெளியில் பெறப்பட்டவை! இலங்கையிற்கு வெளியில் வெறப்பட்ட இவ் ஓட்டங்களுள் 43.95 வீதமான ஓட்டங்கள் (1035) SENA நாடுகளின் மைதானங்களில் பெறப்பட்டவை! ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆகும் முன் 840 ஓட்டங்களை 26 இன்னிங்ஸ் களில் பெற்றார்!

T20 இல் இலங்கையிற்கு வெளியே 565 ஓட்டங்களை 26 இன்னிங்ஸ்களில் பெற்றார்! சனத் முப்பதிற்கு அதிகமான ஓட்டங்களை பெற்றபோது இலங்கை அணி 75 வீதமான போட்டிகளில் வெற்றிபெற்றது!

இவ்வாறு சனத் தன்னை நம்பி இவ்வாறான ஓர் பரீட்சார்த்த முயற்சியில் இறங்கிய கிரிகெட் சபை மற்றும் அணி தலைவர் ஆகியோரை திருப்தி படுத்தினார்!

சனத் ஒரு புரம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க இலங்கை அணி 1993 இல் எதிர்கொண்ட நிலமைக்கு மீண்டும் தள்ளப்பட்டது! ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரை மறுபடியும் தெரிவு செய்ய வேண்டும்! இரண்டு வருடங்களில் உலக கிண்ணம் இடம்பெறவுள்ளதால் உடனடியாக தேர்வு செய்யவேண்டி இருந்தது. அதற்குமுன் கிட்டத்தட்ட 20 போட்டிகளில் சனத் உடன் இணைந்து சங்கா போட்டியை ஆரம்பித்தார்! உடனடி தேவை என்பதால் 1993 இல் செய்த அதே பரீட்சார்த்த முயற்சியை மீண்டும் செய்து பார்த்தது இலங்கை அணி! இம்முறை 10 வருடம் low and middle order இல் ஆடிய ஒரு சகல துறை வீரர் மீது இம்முயற்சியை மேற்கொண்டது!

1999 இல் Off spin பந்துவீச்சாளராக அறிமுகமாகி பந்துவீச்சு , துடுப்பாட்டம் என இரண்டிலும் இலங்கை அணிக்கு கை கொடுத்த ஒரு வீரர்! 2009 ஆம் ஆண்டு சனத் உடன் இணைந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்க அழைக்கப்படுகிறார்! இத்தனை நாள் low order ஆடிய ஒரு வீரரை இவ்வாறு புது பந்தினை எதிர்கொண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இறக்கும் முயற்சி எவ்வாறான எதிர்வலைகளை உருவாக்கி இருக்கும்? விமர்சனங்களால் இலங்கை கிரிகெட் சபை சல்லடையாக்கப்பட்டிருக்கும் அல்லா? ஆனால் அவை அனைத்திற்கும் தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆடிய முதலாவது போட்டியிலேயே பதிலளித்தார் டில்ஷான்!

ஆம் டில்ஷான் பாகிஸ்தான் இற்கு எதிராக 33 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்று தான் இந்த இடதிற்கு தகுதியானவன் எனும் முத்திரையை பதித்தார்! அதன் பின் இரண்டாவது போட்டியில் 76 , மூன்றாவது போட்டியில் 137* என தான் தேர்வு செய்யபட்டதற்கான நியாயத்தை உலகறிய செய்தார்! அதன்பின் டில்ஷான் தொட்டது எல்லாம் பொன்னாக மாறியது!

அறிமுகமாகி 10 ஆண்டுகளின் பின்னர் தான் டில்ஷான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆனார்! இந்த பத்து ஆண்டுகளில் low and middle order இல் 2923 ஓட்டங்களை குவித்தார் 127 இன்னிங்ஸ் களில்! இவற்றுள் 2182 ஓட்டங்கள் இலங்கையிற்கு வெளியில் 29.09 எனும் சராசரியில் பெறப்பட்டவை! டெஸ்ட் இலும் இந்த பத்து ஆண்டுகளில் 3273 ஓட்டங்களை 89 இன்னிங்ஸ் களில் 37.02 எனும் சராசரியில் பெற்றார்!.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அறிமுகமான பின்னர் 46.04 எனும் சராசரியில் 176 இன்னிங்ஸ்களில் 7367 ஓட்டங்கள் டில்ஷானின் பெயரின் பின்னால் எழுதப்பட்டன! இவற்றுள் 53.6 வீதமான ஓட்டங்கள் இலங்கையிற்கு வெளியில் டில்ஷானினால் பெறப்பட்டவை! இலங்கையிற்கு வெளியே பெறப்பட்ட ஓட்டங்களுள் 58 வீதமான ஓட்டங்கள் SENA நாடுகளில் பெறப்பட்டன! டில்ஷான் சதம் அல்லது அறை சதம் பெற்ற போட்டிகளில் 70 வீதமான போட்டிகளை இலங்கை அணி வெற்றி கொண்டது!

ஆரம்ப துடுப்பாட வீரர் ஆனபின் டெஸ்ட் போட்டிகளில் 2170 ஓட்டங்களை குவித்தார் ! இவற்றுள் 73 வீதமான ஓட்டங்கள் இலங்கையிற்கு வெளியே பெறப்பட்டன! இலங்கையிற்கு வெளியே பெறப்பட்ட ஓட்டங்களுள் 62 வீதமானவை SENA மைதானங்களில் பெறப்பட்டவை!

T20 இல் 1191 ஓட்டங்களை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வெளிநாடுகளில் டில்ஷான் பெற்றுகொண்டார்! முப்பதிற்கு அதிகமான ஓட்டங்களை குவித்த போட்டிகளில் 80 வீதமான போட்டிகளில் இலங்கை வெற்றியை தனதாக்கியது!

152 ஓடிஐ போட்டிகள் , 55 டெஸ்ட் போட்டிகளின் பின்னர் தான் டில்ஷான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆனார்! ஆனால் அவ்வாறு ஒரு அவதாரம் எடுத்த பின் டில்ஷானின் வரைபு செங்குத்தாக செல்ல ஆரம்பித்து! ஒரு புறம் சனத் மறுபுறம் டில்ஷான் என ஒரு தரமான ஆரம்ப துடுப்பாட்ட சோடி இலங்கை கு கிடைத்து! இலங்கை அணிக்கு கிடைத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் இவர்கள் இரண்டு பேரிற்கும் முக்கியமான இடமுண்டு!

டில்ஷான் சனத் சோடி ஒன்றாக ஆடி 1112 ஓட்டங்களை இணைப்பாட்ட ஓட்டங்களாக பெற்றுள்ளது! இவற்றுள் சதம் அல்லது அரை சதம் பெற்ற போட்டிகளில் 42 வீதமான போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டது!

சனத் , டில்ஷான் இரண்டு பேரும் இருவேறு காலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரே பரீட்சார்த்த முயற்சியின் விளைவுகள்! இந்த இரண்டு பேரும் பல போட்டிகளில் ஒன்றாக ஆடி இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்று தந்தவர்கள்! இலங்கை ரசிகர்கள் மற்றுமன்றி கிரிகெட் ரசிகர்களின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார்கள்!

ஒரு சிறு பரீட்சார்த்த முயற்சி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற காரணமாக அமைந்தது! 1996 உலக கிண்ண வெற்றி , 2011 உலக கிண்ண பைனல் , 2014 T20 உலக கிண்ணம் என கிரிகெட் இன் பல கௌரவங்களையும் பெற காரணமாக அமைந்தது!

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி ஆரம்ப துடுப்பாடட வீர்ரகளாக கோலோச்சிய வீரர்கள் இவர் இரண்டு
பேரும் தான்!

இவ்வாறான ஒரு ஒரு பரீட்சார்த்த முயற்சியை 10 வருடங்களின் பின் மீண்டும் செய்யவேண்டிய ஒரு நிலை இலங்கை அணிக்கு இப்போது உள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *